யாழ்ப்­பா­ணம்,  வர­ணி­யில் இடம்­பெற்ற கொள்­ளைச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வ­ருக்கு உடந்­தை­யாக இருந்­த­வர் என்று பொது­மக்­க­ளால் குற்­றம் சுமத்­தப்­பட்ட இளை­ஞர் ஒரு­வர், கடு­மை­யா­கத் தாக்­கப்­பட்டு மீசா­லை­யி­லி­ருந்து வரணி இயற்­றாலை வரை­யில் இழுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளார்.

வாய், மூக்கு உடைந்து குருதி சிந்­தி­ய­நி­லை­யில் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். அவரை மருத்­து­வ­ம­னை­யில் பொலி­ஸார் சேர்ப்­பித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் இடம்­பெற்­றுள்­ளது.

வரணி இயற்­றா­லை­யில் கடந்த 4ஆம் திகதி இடம்­பெற்ற கொள்­ளைச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­ப­ருக்கு நெருக்­க­மா­ன­வர் மீசா­லை­யி­லுள்ள வீடொன்­றில் பதுங்­கி­யுள்­ளார் என்ற தக­வல் பொது­மக்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது.

மீசா­லைக்கு வந்த வர­ணி­யைச் சேர்ந்த பொது­மக்­கள் சந்­தே­க­ந­பரை பிடித்து அடித்து அங்­கி­ருந்து வர­ணி­வரை வீதி­யில் இழுத்­துச் சென்­றுள்­ள­னர். இது தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கும் தக­வல் வழங்­கப்­பட்­டது. சந்­தே­க­ந­பரை பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து மீட்ட பொலி­ஸார், சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர்.

வரணி, இயற்­றா­லைப் பகு­தி­யில் உள்ள வீடொன்­றி­னுள் கடந்த திங்­கட்­கி­ழமை இரவு நுழைந்­த­வர்­கள் அங்­கி­ருந்­த­வர்­களை ஆயு­தங்­க­ளைக் காட்டி அச்­சு­றுத்தி, அங்­கி­ருந்த பெண்­ணைத் தாக்­கி­விட்டு 5 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­க­ளை­யும் 57 ஆயி­ரம் ரூபா பணத்­தை­யும் கொள்­ளை­ய­டித்­தி­ருந்­த­னர்.

வீட்­டா­ரின் அவ­லக் குரல் கேட்டு அந்­தப் பகுதி மக்­கள் சுற்­றி­வ­ளைத்து தேடிய போது பற்­றைக்­குள் உள்ள மரத்­தில் ஒளிந்­தி­ருந்த இரு­வர் பிடிக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.

கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணம் மற்­றும் நகை­க­ளு­டன் ஒரு­வர் தப்­பி­யோ­டி­யுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தப்பி ஓடி­ய­வ­ருக்­கும் தாக்­கு­த­லுக்கு உள்­ளான நப­ருக்­கும் தொடர்பு உள்­ளது என்று தெரி­வித்தே பொது­மக்­கள் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இதே­வேளை மீசா­லை­யில் சம்­பந்­தப்­பட்ட நபர் தங்­கி­யி­ருந்த வீடு தமிழ்த் தேசிய அர­சி­யல் கட்சி ஒன்­றின் அலு­வ­ல­மாக முன்­னர் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறப்­ப­டு­கின்­றது.