குழந்­தை­க­ளின் ஆரோக்­கி­யத்தைக் கருத்­தில் கொண்டு „குழந்­தை­கள் அறையை“ உரு­வாக்­கு­வது தொடர்பில் கர்ப்­பிணிப்பெண்களுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டு வருகிறது.

குழந்­தை­க­ளின் ஆரோக்­கி­யம் என்­பது அவர்­க­ளின் கரு வளர்ச்­சியில் இருந்து தீர்­ம­னிக்­கப்­ப­டு­கி­றது. பெண் கரு­வுற்ற காலத்­தில் இருந்து கண்­ணால் பார்க்­கும் ,காதால் கேட்கும் செயற்­பா­டு­கள் மகிழ்ச்­சியைத் தரக் கூடி­ய­தாக இருந்­தால் குழந்­தை­யின் ஆரோக்­கி­யம் சிறப்­பாக இருக்­கும்.

இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு சுகா­தார மருத்­துவ அதி­காரி பணி­மை­யின் கீழ் செயற்­ப­டும் குடும்ப நல அலு­வ­லர்­கள் மூலம் “குழந்­தை­கள் அறை “அமைப்­பது தொடர்­பில் கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு அறி­வுத்­தப்­பட்டு வரு­கி­றது.

அதா­வது பெண் கரு­வுற்ற நாளில் இருந்­தும் குழந்தை பிறந்து மூன்று வயது அடை­யும் வரை வீட்­டில் அந்த குழந்­தை ­யின் அறை சிறப்­பா­ன­தாக அமைய வேண்­டும்.

அந்த அறை­யில் ஓவி­யங்­கள், கைவினைப் பொருள்­கள் , குழந்தை விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள்,புத்­த­கங்­கள்,சத்த மிடும் கரு­வி­கள்,ஒளிப்­ப­டங்­கள் போன்ற பல்­வேறு விட­யங்­களை உள்­ள­டக்­கிய அறை­யாக இது அமைய வேண்­டும் – என்று தெரி­விக்­கப்­பட்­டது.