தேவையான பொருள்கள்:

பொடியாக நறுக்கிய நார்த்தங்காய் – 1 கப், புளி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிது, எள் – 1 டீஸ்பூன், வெல்லம் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்கத் தேவையானவை :

கடுகு, கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3

செய்முறை:

புளியை ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல், எள்ளை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நறுக்கிய நார்த்தங்காயை நீரில் சற்றே வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

பின்னர், வேக வைத்த நார்த்தங்காயை அதில் சேர்த்து வதக்கிய பின் புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள், எள்ளுப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும்போது வெல்லம் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைத்துவிடவும். ஜீரண சக்திக்கு நார்த்தங்காய் அருமருந்து. புகையிலைப் பழக்கம் உள்ளவர்களின் உடலில் சேரும் நஞ்சையும் முறித்துவிடும் சக்தி கொண்டது நார்த்தங்காய்.