• மேஷம்

  மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண் டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதி கரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: எதையும் உற்சா கமாக செய்யத் தொடங்கு வீர்கள். மூத்த சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் புது  அதிகாரி உங்
  களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

 • மிதுனம்

  மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில்  உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

 • கடகம்

  கடகம்:  மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப் படைக்க   கூடாது என்று  முடிவெ டுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைகண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

 • சிம்மம்

  சிம்மம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரி யங்களை முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனத் தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில்  பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

 • கன்னி

  கன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து  உயரும். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத் தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதி காரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

 • துலாம்

  துலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் போட்டி களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடு வதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்
  கழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

 • தனுசு

  தனுசு: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார் கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபா ரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோ கத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.  போராடி வெல்லும் நாள்.

 • மகரம்

  மகரம்: எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுக் கிட் டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சில
  புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத் தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.

 • கும்பம்

  கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசு வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம்கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

 • மீனம்

  மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.  உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.