யாழ்ப்­பா­ணத்­துக்­கான குடி­தண்­ணீர்ப் பிரச்­சி­னை­ யைத் தீர்ப்­ப­தற்கு ஆறு திட்­டங்­கள் பரி­சீ­ல­னை­யில் உள்­ளன என்­றும், அவற்­றில் வட­ம­ராட்சி கிழக்கு நீரே­ரி­யில் இருந்து தண்­ணீர் வழங்­கும் திட்­டம் விரை­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்றும் வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பா­ணத்­தில் குடி­தண்­ணீர்ப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு 6 திட்­டங்­கள் பரி­சீ­ல­னை­யில் உள்­ளன. வட­ம­ராட்சி கிழக்கு நீரே­ரி­யில் குளம் அமைத்து தண்­ணீ­ரைத் தேக்கி குடா­ நாட்­டுக்கு வழங்­கும் திட்­டத்­துக்­கு­ரிய நிதி அனு­ம­தி­கள் பெறப்­பட்டு விட்­டன. அந்­தத் திட்­டத்­தால் சூழல் பாதிப்பு இருக்­கின்­றதா என்று ஆரா­யப்­ப­டு­கின்­றது.
இரண்­டா­வ­தாக 1956ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஆறு­மு­கம் திட்­டத்­தில் தற்­போ­தைய நடை­மு­றைக்கு ஏற்­ற­வாறு மாற்­றி­ய­மைத்து ‘அட்­வான்ஸ் ஆறு­மு­கம்’ திட்­ட­மும் பரி­சீ­ல­னை­யில் உள்­ளது.

பாலி­யாறு திட்­டம் மூன்­றா­வ­தா­க­வும், மேல் பறங்­கி­யாறு கீழ் பறங்­கி­யாறு திட்­டம் நான்­கா­வ­தா­க­வும் பரீ­சி­லிக்­கப்­ப­டு­கின்­றது.
மத்­திய மற்­றும் சப்­ர­க­முவ மாகா­ணத்­தில் மழை வீழ்ச்சி அதி­கம். அங்­கி­ருந்து குழாய் மூல­மாக யாழ்ப்­பா­ணத்­துக்கு குடி­தண்­ணீர் கொண்டு வர­மு­டி­யும்.

ஆறா­வ­தா­கத்­தான் இர­ணை­மடு திட்­டம் உள்­ளது. அத­னைப் பின்­னர் பார்ப்­போம் என்று வைத்­துள்­ளோம். அங்­குள்ள விவ­சா­யி­கள் இந்த விவ­கா­ரத்­தில் வேறு­பட்ட கருத்­துக்­க­ளைக் கொண்­டுள்­ளார்­கள். இப்­போ­தைக்கு அங்­கி­ருந்து கட­லுக்­குச் செல்­லும் தண்­ணீரை காசு கொடுத்து யாழ்ப்­பா­ணத்­துக்கு வாங்க விரும்­பு­கின்­றோம். இந்­தப் பணத்தை அங்­குள்ள விவ­சா­யி­க­ளுக்கு கொடுத்­தால், விவ­சாய ஆராய்ச்­சிக்கு அவர்­கள் பயன்­ப­டுத்த முடி­யும். எனது பத­விக் காலத்­தில் யாழ்ப்­பா­ணத்­தின் குடி­தண்­ணீர்ப் பிரச்­சி­னை ­யைத் தீர்க்க விரும்­பு­கி ன்­றேன் -– என்­றார்.