யாழ்ப்பாணதிற்கு வரும் வெளி மாவட்டத்தில் இருந்து நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனேல்ட் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் தான் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் மாநகர முதல்வர் குறித்த மாநகர

பகுதியில் தொற்று ஏற்படாவண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை, உடனடியாக ஆராயும்படி ஆளுநர் பணித்தமைக்கு அமைய இந்த$

நடைமுறை இன்றிலிருந்து பின்பற்றப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்