ஒலுவில், அஷ்ரப் நகர் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் காட்டு யானைகள் சில இன்று(02) அதிகாலை வேளையில் புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

அதிகாலை மூன்று மணியளவில் புகுந்த இக்காட்டு யானைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து மாந்தோப்பு, தென்னந்தோப்பு உள்ளிட்டவற்றுக்கு சேதம்

விளைவித்துள்ளதுடன், யானை வேலிகள் சிலவற்றையும் நாசம் செய்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.