மன்னார் – நானாட்டான் அருவியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது சுழலில் சிக்கி காணாமல் போன கிராம சேவகரை கடந்த இரு நாட்களாக தேடிவந்த

நிலையில் அவரது சடலம் இன்று (31) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம

அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.
நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை

மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் அருவியாற்றில் குளிக்கும் போது இவ் அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.