வவுனியாவில் கடந்த வாரம் காவல் துறை என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் வவுனியா காவல் துறைாயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை காவல் துறை என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்து விட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற

நிலையில் காவல் துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா காவல் துறை இன்று கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற காவல் துறை உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது