மன்னார் மாவட்டத்தில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான நீர் 10-05-21. திங்கட்கிழமை மதியம் கட்டுக்கரை குளத்தின் 11 ஆம் கட்டை பிரதான வாய்க்காலின் கதவு ஊடாக நீர் வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் இந்த முறை 2 ஆயிரத்து 578 ஏக்கர் நெல் பயிர் செய்யும் 400 ஏக்கர் மேட்டு நில பயிர் செய்கையும் மேற்கொள்வதற்காக 11 ஆம்,12ஆம் 13ஆம்

கட்டை மற்றும் சின்ன உடைப்பு , பெரிய உடைப்பு, அடைக்கல மோட்டை ,போன்ற பிரதான வாய்க்கால்களின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டவுள்ளது.


இதேவேளை விவசாய ஆராய்ச்சி பண்ணைக்காக முருங்கன் 14 ஆம் கட்டை வாய்க்காலில் இருந்து நீர் விநியோகிக்கப்பட உள்ளது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டு பயிர்ச் செய்கைக்கான நீர் விநியோகத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

கொரோனா தொற்று அபாயத்தை கருத்திற்கொண்டு குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் சிவராசா யோகராசா , மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அப்துல் சுக்கூர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கண்டிருந்தனர்.

மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கட்டுக்கரை குளத்தில் தற்போது 7.11 அடி நீர் காணப்படுவதோடு,வான் பாய்ந்து கொண்டிருப்பதாக மன்னார் மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் சிவராசா யோகராசா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.