ஏறாவூர்-செங்கலடி,மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில்,வேன் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இரவு,ஓட்டமாவடி பகுதியிலிருந்து ஏறாவூர் நோக்கி சென்ற வாகனம்,வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் விபத்துக்கு, சாரதியின் அதிவேகமும் தூக்க கலக்கமுமே காரணமென காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையில்

தெரியவந்துள்ளது.குறித்த சம்பவத்தில் வான் வண்டியில் பயணித்த இருவருக்கும் எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.