சட்டவிரோதமான முறையில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறிலங்கா காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவல பகுதியில் வைத்து நேற்று (15) மாலை 6 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிக்றது.

குறித்த ட்ரோனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது