கொழும்பு – சீதுவையிலிருந்து மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலைகளுக்கு லொறியொன்றில் 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9240 மதுபானப் போத்தல்களை எடுத்துச்சென்ற லொறியை வாழைச்சேனை ரிதிதென்னை பொலிஸ்

சோதனைச்சாவடி பொலிஸார் 01-06-2021.அன்று மடக்கி பிடித்துள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, பொலநறுவை எல்லை பகுதியான ரிதிதென்னை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதிச்சோதனை சாவடியில் இன்று பொலிஸார் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தன்போது மட்டக்களப்பை நோக்கிச் சென்ற லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது பயணத்தடையை மீறி சீதுவையிலுள்ள மதுபான உற்பத்தி நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலைக்கு மதுபானங்களை எடுத்துச் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த லொறியிலுள்ள 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9240 போத்தல் கொண்ட மதுபானங்களையும்,லொறியையும் கைப்பற்றியதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.