கொழும்பு – டாம் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – டாம்வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டில் இன்று அதிகாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தீயணைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன