வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவர் nguyen duy hai. வயது 31. இவரது வலது காலில் 80 கிலோ எடை உடைய கட்டி. கடந்த 30 வருடங்களாக இக்கட்டி வளர்கின்றது. இதனால் 14 வருடங்களுக்கு முன்னர் இவரது வலது கால் வெட்டப்பட்டது.

ஆனால் அறியாமை, வறுமை, அசிரத்தை காரணமாக இவரது குடும்பத்தினர் கட்டியை கவனிக்க தவறி விட்டனர். இவரால் தற்போது உட்காரவும், படுக்கவும்தான் முடிகின்றது. எழும்ப முடியாது. 61 வயதுத் தாயின் பராமரிப்பில் உள்ளார். ஆனால் இவருக்கு ஏற்பட்டு இருப்பது புற்று நோய் அல்ல.

மரபணு குழப்பத்தால் ஏற்பட்டு இருக்கின்ற நோய். ஆனால் எப்போது பார்த்தாலும் முறுவல் பூத்த முகத்துடன் காணப்படுகின்றார். சத்திர சிகிச்சை மேற்கொள்கின்றமைக்கு மனிதாபிமானிகள்,

தொண்டர் அமைப்புக்கள் ஆகியவற்றின் நிதி அன்பளிப்புக்களை கோரி உள்ளார்.