சில மிருகங்களின் வாயில் சிக்கும் சிறிய மிருகங்கள் உயிர் தப்புவது அவ்வளவு இலகான விடயமல்ல. தவளைகளும் இவ்வாறு ஏனைய மிருகங்களிடம் சிக்கி உயிர் துறக்கும்.

ஆனால் தற்பொழுது தவளைகளின் பிடியில் சிக்கி சிறிய விலங்குகள் பலியாகின்றன என்றால் நம்ப முடியுமா? ஆபிரிக்க காடுகளில் 4 இறாத்தலை விட எடையுள்ள தவளைகள் வாழ்கின்றன.

இவற்றுக்கு எருமைத் தவளை என்று பெயர் இவற்றுக்கு கூரிய பற்கள் உள்ளன. படத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும். இராட்சத தவளையின் வாய்க்குள் சிக்கிக் கொண்ட எலியொன்று கடைசியாக உலகை ஒரு தடவை எட்டிப்பார்க்கிறது.

ஏனைய தவளைகளைப் போலன்றி இதன் பல்வரிசை வித்தியாசமானது, அதற்குள் எது அகப்பட்டாலும் தப்பிக்கவே முடியாது.

இத்தகைய இராட்சத தவளை சில வேளைகளில் 17 நாகப் பாம்புக் குட்டிகளை ஒரே நேரத்தில் மென்று விழுங்கிய வரலாறும் உள்ளது.

இது மொஸாம்பிக்கில் எடுக்கப்பட்ட காட்சியாகும்.

பாக்குவெட்டியில் சிக்கிய பாக்கு போல என்றொரு பழமொழியுள்ளது. இனி அதனை தவளையின் வாயில் சிக்கிய எலிபோல என்று மாற்ற வேண்டியதுதான்.
இனொரு இராட்சத தவளை ……..ஐந்து வயது குழந்தையை ஒத்த பரிமாணத்தில் தவளை ஒன்று பிடிபட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் ஆற்றங் கரையோரம் இதனை கண்டு வீட்டிற்கு பிடித்து வந்து வைத்துள்ளார்.

20 Kg நிறையுள்ள இத் தவளையை 200 பவுன்ஸ் விலை பேசுகிறார் இந்த மீனவர்

பாம்பை விழுங்கும் இராட்சத தவளை
நாம் பொதுவாக தவளைகளை பாம்பு விழுங்கும் என்பதை அறிந்திருப்போம். கற்கும்போது கூட உணவுச் சங்கிலியில் தவளையை பாம்பு விழுங்கும் என்று தான் கற்றிருக்கின்றோம் ஆனால் இங்கு பாம்பை ஒரு தவளை விழுங்குகின்றது