யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இரண்டாயிரம் பனைகளைத் தறிப்பதற்குப் பனை அபிவிருத்திச் சபையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.பனைகள் தறிக்க முடியாத அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும் தற்பொழுது மீளக் குடியமர்வு நடவடிக்கைகளின் பின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்குப் பனை மரங்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே இந்த வருடம் மட்டும் இரண்டாயிரம் பனைகளைத் தறிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தாகப் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

இதனடிப்படையில் ஆண் பனைகள், காலஞ்சென்ற முதிர்ந்த பனைகள், முறியக்கூடிய நிலை யிலுள்ள பனைகளை பனை அபிவிருத்திச் சபையின் அனுமதியுடன் தறிக்க முடியும் என்றும் மீள் நடுகை நிதியமாக பனை ஒன்றுக்கு ரூபா 500 அறவிடப்படும் இந்த நிதியினை கொண்டு வருடம் ஒன்றுக்கு 3 லட்சம் பனம் விதைகள் நடுகை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.