ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பஞ்ச ரத தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

அதிகாலை முதல் மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று சோடச உபசாரங்களுடன் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.